டி20 உலகக்கோப்பை: டேவிட் மாலனுக்கு காயம்; இங்கிலாந்துக்கு பின்னடைவு!

Updated: Mon, Nov 07 2022 21:06 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஒன்றில் செயல்பட்ட நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேபோல், குரூப் இரண்டில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

வரும் 9ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும், 10ஆம் தேதி மதியம் மணிக்கு அடிலெய்டில் நடைபெறவுள்ள அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணிகள் 13ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.

இங்கிலாந்து அணி கடந்த போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடியபோது, அந்த அணியின் மிடில் வரிசை வீரர் டேவிட் மலான் தசைபிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். இதனால், பீல்டிங் செய்யாமல் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பேட்டிங்கும் களமிறங்கவில்லை.

இடது கை வீரரான இவருக்கு, தசைப்பிடிப்பு பிரச்சினை சரியாக ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது நிச்சயம் இங்கிலாந்துக்கு பின்னடைவான விஷயம்தான். இங்கிலாந்து அணி ஸ்பின்னர்களுக்கு எதிராக தொடர்ந்து சொதப்பி வருகிறது. அந்த அணியின் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுபவராகா டேவிட் மலான் இருக்கிறார். இவர் தற்போது காயம் காரணமாக விலக வாய்ப்புள்ளது என வெளியாகியுள்ள தகவல் நிச்சயம் இங்கிலாந்துக்கு பின்னடைவான விஷயம்தான். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை