டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலிலும் 2ஆவது இடத்திற்கு சென்றது.

Advertisement

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு ஃபீல்டிங் ஒருபுறம் முக்கிய காரணமாக இருந்தாலும், மற்றொரு புறம் பேட்டிங் சொதப்பல்களும் முக்கிய காரணமாக இருந்தது. பெர்த் போன்ற களத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க வேண்டும் என்றால் கூடுதல் பேட்ஸ்மேன்களுடன் தான் இந்திய அணி விளையாட வேண்டியிருந்தது. அதற்கேற்றார் போல தான் ஸ்பின்னர் அக்‌ஷர் பட்டேலை நீக்கிவிட்டு, தீபக் ஹூடாவை கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

Advertisement

இந்நிலையில் ரோகித்தின் முடிவு குறித்து கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், “டாஸின் போது அணியில் தீபக் ஹூடாவை கொண்டு வந்தது ஆச்சரியமாக இருந்தது. எனினும் அவரை எதற்காக ப்ளேயிங் 11இல் கொண்டு வந்துள்ளோம் என்பது குறித்து கேப்டன் ரோகித் விளக்கமே தரவில்லை. நானாக ஒரு யோசனைக்கு வந்துவிட்டேன்.

அதாவது தென் ஆப்பிரிக்க அணியில் இடதுகை வீரர்கள் இருப்பதால், தீபக் ஹூடா பவுலிங்கில் தாக்கம் ஏற்படுத்துவதற்காக சேர்த்தனர் என நினைத்தேன். ஆனால் ஹூடாவுக்கு பவுலிங் வாய்ப்பே கொடுக்கவில்லை. பேட்ஸ்மேனாக பயன்படுத்தினால், ரிஷப் பந்தை கொண்டு வந்திருக்க வேண்டியது தானே. எதற்காக முட்டாள் தனமாக ஹூடாவை கொண்டு சென்றார் என புரியவே இல்லை” என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரிஷப் பந்த் கண்டிப்பாக சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News