டி20 உலகக்கோப்பை தொடரி எட்டாவது சீசன் நேற்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரில் தற்போது, தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

அதேசமயம் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிப்பெற்றுள்ள 8 அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. அதன்படி இன்று பிரிஸ்பேனில் நடைபெறும் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் 6 ரன்களிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின் ஜோடி சேர்ந்த மார்ட்டின் கப்தில் - கிளென் பிலீப்ஸ் இணை பொறுப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். 

பின் மார்ட்டின் கப்தில் 26 ரன்களிலும், கிளென் பிலீப்ஸ் 20 ரன்களோடும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 17 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கேசவ் மஹாராஜ் 3 விக்கெட்டுகளையும், ஷம்ஸி, பார்னெல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரிஸா ஹெண்ட்ரிக்ஸ் - ரைலீ ரூஸோவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இத்ல் ஹெண்ட்ரிக்ஸ் 27 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ரூஸோவ் அரைசதம் கடந்து அசத்தினர். 

Advertisement

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரைலீ ரூஸோவ் 31 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என மொத்தம் 53 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கும் உதவினார்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 11.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News