டி20 உலகக்கோப்பை 2022: குசல் மெண்டிஸ் அதிரடியில் இலங்கை அணி 162 ரன்கள் குவிப்பு!

Updated: Thu, Oct 20 2022 11:20 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 9ஆவது போட்டியில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் நிஷங்கா 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தனஞ்செயா ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் குசால் மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்த சரித் அசலங்காவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.

அதேசமயம் மறுமுனையிலிருந்த சரித் அசலங்கா 31 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்ஷாவும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த குசால் மெண்டிஸும் 79 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீட், பால் வான் மீகிரன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை