டி20 உலகக்கோப்பை: ராகுல், சூர்யா காட்டடி; ஜிம்பாப்வேவுக்கு 187 டார்கெட்!

Updated: Sun, Nov 06 2022 15:10 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் இன்றுடன்  முடிவடைகிறது. இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னெறியுள்ளன.

இந்நிலையில் மெல்போர்னில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் வழக்கம்போல கேப்டன் ரோஹித் சர்மா 15 ரன்களுடன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - விராட் கோலி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

பின் இப்போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 26 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்ப மறுமுனையில் அரைசதம் கடந்த கேஎல் ராகுலும் 51 ரன்களைச் சேர்த்து அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ரிஷப் பந்த் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் - ஹர்திக் பாண்டியா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

அதன்பின் 17 பந்துகளில் 18 ரன்களை எடுத்திருந்த ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். ஆனாலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது. இதில் கடைசி வரை அட்டமிழக்கமால் இருந்த சூர்யகுமார் யாதவ் 61 ரன்களைச் சேர்த்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை