டி20 உலகக்கோப்பை: ரஸா சுழலில் சிக்கிய விண்டீஸ்; ஜிம்பாப்வேவுக்கு 154 டார்கெட்!

Updated: Wed, Oct 19 2022 15:10 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 8ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இத்ல் மேயர்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த எவின் லூயிஸும் 15 ரன்களோடு நடையைக் கட்டினார்.

அதன்பின் வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜான்சன் சார்லஸ் 45 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

பின்னர் களமிறங்கிய ஷமாரா ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர் போன்ற அதிரடி பேட்டர்கள் சிக்கந்தர் ரஸாவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் ரோவ்மன் பாவல் அடுத்தடுத்து இமாலய சிக்சர்களை பறக்கவிட, அவருக்கு துணையாக அகீல் ஹொசைனும் 23 ரன்களைச் சேர்த்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் சிக்கந்தர் ரஸா 3 விக்கெட்டுகளையும், முஸரபாணி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை