டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸுக்கு ஷாக் கொடுத்த ஆஃப்கானிஸ்தான்!

Updated: Thu, Oct 21 2021 08:45 IST
T20 World Cup: Afghanistan Beat West Indies By 56 Runs In Warmup Match (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி - வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணி ஸஸாய், ஷசாத் ஆகியோரின் அரைசதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஹஸ்ரதுல்லா ஸஸாய் 56 ரன்களையும், முகமது ஷசாத் 54 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே சிம்மன்ஸ், லூயிஸ் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை