டி20 உலகக்கோப்பை: இன்றைய போட்டியில் இந்த அணி தான் வெல்லும் - பிரையன் லாரா!

Updated: Thu, Nov 11 2021 17:35 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2ஆவது அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் 14ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும். 

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுமே இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை சிறப்பாக ஆடியுள்ளன. இரு அணிகளுமே, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் ஒன்றுக்கு ஒன்று சளைத்த அணி அல்ல என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

எனவே இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாக திகழும் நிலையில், இந்த 2 அணிகளில் எந்த அணி வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில், இதுகுறித்த தனது கணிப்பை தெரிவித்துள்ளார் பிரயன் லாரா.

Also Read: T20 World Cup 2021

இதுகுறித்து டுவீட் செய்துள்ள பிரயன் லாரா, “எனது கணிப்பு பாகிஸ்தான் தான் ஜெயிக்கும். ஆஸ்திரேலியா மிகவும் அபாயகரமான அணி. அவர்களிடம் வலுவான பேட்டிங் ஆர்டர் உள்ளது. ஆஸ்திரேலிய அணியால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். ஆனால் பாகிஸ்தான் அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டுமே அபாரமாக உள்ளது. எனவே பாகிஸ்தான் தான் ஃபைனலுக்கு செல்லும்” என்று லாரா கணித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை