ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்றுவருகிது. இதில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 70 ரன்களையும், கேஎல் ராகுல் 50 ரன்களையும் சேர்த்தனர்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் - கேஎல் ராகுல் தாகு களமிறங்குவர் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடருக்கு முன்பு நிலைமை வேறாக இருந்தது. இப்போது மேல்வரிசையில் ராகுலைத் தாண்டி யோசிப்பது கடினம். ரோஹித் சர்மா உலகத் தரமான வீரர். அவர் தொடக்க வீரராக அபாரமாக விளையாடி வருகிறார். நான் 3ஆம் நிலை வீரராக விளையாடுகிறேன். இப்போதைக்கு இது மட்டுமே என்னால் கூற முடியும்” என்றார்.