ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, இறுதிப்போட்டி - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வெல்லுமா இந்தியா?
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற வந்த 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாகவும், இந்திய அணி 10 ஆண்டுகளுக்கு பிறகும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம், மூன்றாவது முறையாக டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதன்படி 2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி, அதன்படி கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
இதையடுத்து கிட்டத்திட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இம்முறை கோப்பையை வென்று சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டிய ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். இருப்பினும் இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் விராட் கோலி இத்தொடரில் விளையாடிய 7 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாகவே 75 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சுழற்பந்து வீச்சிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு பக்கபலமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் இருவரும் இணைந்து எதிராணியை நிலை குழைய செய்துள்ளது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
தென் ஆப்பிரிக்க அணி
ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக எப்போது அரையிறுதிவரை சென்று தோல்வியைத் தழுவி வந்த தென் ஆப்பிரிக்கா அணியானது இம்முறை முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த அணி தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்கிறது.
தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்த சீசனில் பெரிதளவில் சோபிக்கவில்லை என்றாலும், குயின்டன் டி காக், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கேப்டன் ஐடன் மார்க்ரம், ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கும் வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். மறுபக்கம் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களுடன் தப்ரைஸ் ஷமிஸ், கேசவ் மகாராஜ் போன்ற எதிரணிக்கு நெருக்கடியைக் கொடுக்கும் பந்துவீச்சாளர்களும் உள்ளது அணிக்கு பலம் சேர்க்கிறது.
தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சென், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.
IND vs SA T20 World Cup Dream11 Team
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக்
பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), விராட் கோலி
ஆல்-ரவுண்டர் - அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன்
பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, ஆன்ரிச் நோர்ட்ஜே, குல்தீப் யாதவ்.