Zimbabwe vs Sri Lanka 2nd T20I: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா மற்றும் பிராட் எவான்ஸ் அகியோர் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினர். 

Advertisement

இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ் ஒரு ரன்னிலும், பதும் நிஷங்கா 8 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய கமில் மிஸாரா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். பின் 20 ரன்னில் கமில் மிஸாராவும், ஒரு ரன்னிலும் நுவனிந்து ஃபெர்னாண்டோவும், கடந்த போட்டியில் அசத்திய கமிந்து மெண்டிஸ் இந்த ஆட்டத்தில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் சரித் அசலங்கா 18 ரன்களையும், தசுன் ஷனகா 15 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இலங்கை அணி 17.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 80 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதன் மூலம் அந்த அணி வரலாற்றில் இரண்டாவது மிகக்குறைந்த ஸ்கோரையும் பதிவுசெய்துள்ளது. ஜிம்பாப்வே அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா, பிராட் எவான்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் - மருமணி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மருமணி 17 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் சிக்கந்தர் ரசா 2 ரன்னிலும் விக்கெட்டுகளை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான பிரையன் பென்னட்டும் 19 ரன்களில் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டோனி முனியோங்காவும் 3 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த ரியான் பர்ல் - முசெகிவா இணை இறுதிவரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதில் ரியான் பர்ல் 20 ரன்களையும், முசெகிவா 21 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 14.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரசா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News