டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றின் 7ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
Advertisement
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் - மைபர்க் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் மைபர்க் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வென்டெர் மெர்வே 6 ரன்களில் வெளியேறினார்.
Advertisement
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மேக்ஸ் ஓடவுட் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஓடவுட் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. நமீபியா அணி தரப்பில் ஜான் ஃபிரைலிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.