ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் அயர்லாந்து கிரிக்கெட் வாரியமும் இன்றைய தினம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தங்கள் அணியை அறிவித்துள்ளது. அதன்படி அனுபவ வீரர் பால் ஸ்டிர்லிங் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் ஆண்ட்ரூ பால்பிர்னி, ஜார்ஜ் டக்ரெல், ஹேரி டெக்ட்ர், லோர்கன் டக்கர், கர்டிஸ் காம்பேர், ஜோஷுவா லிட்டில், பேரி மெக்கர்த்தி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம், டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணி பாகிஸ்தான் அணியுடன் டி20 தொடரிலும் மற்றும் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளுடனான முத்தரப்பு டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான அயர்லாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர்களுக்கான அயர்லாந்து அணியில் ஜோஷுவா லிட்டல் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தொடருக்கான அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடேர், ரோஸ் அடேர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் ஹியூம், பேரி மெக்கார்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.
முத்தரப்பு தொடருக்கான அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடேர், ரோஸ் அடேர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் ஹியூம், பேரி மெக்கார்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடேர், ரோஸ் அடேர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் ஹியூம், ஜோஷுவா லிட்டில், பேரி மெக்கார்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.
அயர்லாந்து அணி போட்டி அட்டவணை
பாகிஸ்தான் டி20 தொடர்:
- மே 10: அயர்லாந்து v பாகிஸ்தான் (முதல் டி20; டப்ளின்)
- மே 12: அயர்லாந்து v பாகிஸ்தான் (இரண்டாவது டி20; டப்ளின்)
- மே 14: அயர்லாந்து v பாகிஸ்தான் (மூன்றாவது டி20; டப்ளின்)
நெதர்லாந்தில் முத்தரப்பு தொடர்:
- மே 19: அயர்லாந்து v நெதர்லாந்து (வூர்பர்க்)
- மே 20: அயர்லாந்து v ஸ்காட்லாந்து (வூர்பர்க்)
- மே 23: அயர்லாந்து v ஸ்காட்லாந்து (வூர்பர்க்)
- மே 24: அயர்லாந்து v நெதர்லாந்து (வூர்பர்க்)
டி20 உலகக் கோப்பை:
- மே 31: அயர்லாந்து v இலங்கை (வார்ம்-அப்; புளோரிடா)
- ஜூன் 5: அயர்லாந்து v இந்தியா (நியூயார்க்)
- ஜூன் 7: அயர்லாந்து v கனடா (நியூயார்க்)
- ஜூன் 14: அயர்லாந்து v அமெரிக்கா (புளோரிடா)
- ஜூன் 16: அயர்லாந்து v பாகிஸ்தான் (புளோரிடா)