தூபேவிற்கு பதில் சாம்சனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

Updated: Thu, Jun 06 2024 19:59 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிககவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறக்கியுள்ள இந்திய அணியானது அயர்லாந்துக்கு எதிரான தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

இதையடுத்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது ஜூன் 9ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் ஷிவம் தூபே பந்துவீச போவதில்லை என்றால் அவரது இடத்தை சஞ்சு சாம்சனிற்கு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய மஞ்ச்ரேக்கர், “ஷிவம் துபே பந்துவீசப் போவதில்லை என்றால் அவருக்கு பதிலாக அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை பேட்டராக விளையாட வைக்க வேண்டும் என்பதே சரியான முடிவு. சஞ்சு சாம்சன் இறுதியாக முதிர்ச்சியடைந்துவிட்டார் என்று நான் நம்புகிறேன்.  மேலும் சர்வதேச அளவில் சஞ்சு சாம்சன் இந்தியா அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். மேலும் துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு பேட்டாராக அவரை நீங்கள் பயன்படுத்து உள்ளீர்கள் எனில் அவரைவிட சிரந்த பேட்டிங் உக்தியை கொண்டுள்ள சாம்சனை நீங்கள் நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். ஏனெனில் ஷிவம் தூபே சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடினாலும், சஞ்சு சாம்சனால் பந்தை தாமதமாக விளையாடுவதுடன் டைமிங்குடனும் விளையாட முடியும். மேலும் அவரால் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான் புல் ஷாட்டும் விளையாட முடியும் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான அவரை பயன்படுத்துவது சிறந்த உத்தியாக இருக்கலாம். 

ஆனால் விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரையில் ரிஷப் பந்த் சிறந்த வீரராக உள்ளார். ரிஷப் பந்த் உங்கள் அணியின் டெஸ்ட் கீப்பர் என்பதால் சஞ்சு சாம்சனிற்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்பதை நான் உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன். அதேசமயம் பயிற்சி ஆட்டம் சஞ்சு சாம்சனின் வாய்ப்பிற்கு சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன்புவரை சஞ்சு சாம்சன் தான் என்னுடையை அணியின் மூன்றாம் இடத்தையும், ரிஷப் பந்த 5ஆம் இடத்தையும் உறுதிசெய்திருந்தனர், ஆனால் பயிற்சி ஆட்டத்தில் சாம்சன் தனது வாய்ப்பை இழந்துவிட்டார். ஒரு அணியில் நீங்கள் ஒரு விளிம்பு நிலை வீரராக இருக்கும் சமயத்தில், இதுபோல் நடப்பது  இயல்பான ஒன்று தான்” என்று தெரிவித்துள்ளார். 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை