முத்தரப்பு டி20 தொடர்: செஃபெர்ட், ரவீந்திரா அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 191 டார்டெக்!
ZIM vs NZ, T20I: ஜிம்பாவேவுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டிம் செஃபெர்ட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு டிம் செஃபெர்ட் மற்றும் டிம் ராபின்சன் இணை தொடக்காம் கொடுத்தனர். இதில் டிம் ராபின்சன் 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் செஃபெர்டுடன் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 63 ரன்களில் ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மேன் மற்றும் பெவான் ஜெக்கப்ஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 7 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களைச் சேர்க்க, நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையிலும் 190 ரன்களைச் சேர்த்துள்ளது.
Also Read: LIVE Cricket Score
ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் ந்ங்கரா 4 விக்கெட்டுகளையும், மபோசா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடவுள்ளது.