முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!

Updated: Sat, Aug 30 2025 19:47 IST
Image Source: Cricketnmore

UAE vs PAK Match Prediction And Probable Playing XI, UAE Tri-Series 2nd T20: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகள் யுஏஇ அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன.  

அதன்படி இந்த முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் இரண்டாவதுலீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிக்ளுக்கும் இடையேயான இந்த போட்டி ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்களும், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் இருப்பதால் இதில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

UAE vs PAK T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
  • நேரம்- ஆகஸ்ட் 29, இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

Sharjah Cricket Stadium Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 63 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் 36 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 27 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 142 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 251 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

AFG vs PAK T20 : Where to Watch?

இந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காண முடியும்.

UAE vs PAK 2nd T20I Probable Playing XI

United Arab Emirates Probable Playing XI: முகமது வாசிம் (கேப்டன்), ஜோஹைப் கான், அலிஷான் ஷராபு, ராகுல் சோப்ரா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் கார்ல் டி'சோசா, அகீஃப் ராஜா, முகமது சாகிர் கான், ஹைதர் அலி, முகமது ஜவாதுல்லா.

Pakistan Probable Playing XI : சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சல்மான் அலி ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், முகமது ஹாரிஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப், சுஃபியான் முகீம்.

United Arab Emirates vs Pakistan Today's Match Prediction

இந்தப் போட்டியில், ஐக்கிய அரபு அமீரக அணி சொந்த நிலைமையை பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு மிகவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். பாகிஸ்தான் வீரர்கள் அதிக அனுபவத்தைக் கொண்டுள்ளனர், அதை அவர்கள் நிச்சயமாக ஷார்ஜா மைதானத்தில் வெளிப்படுத்துவார்கள்.

Also Read: LIVE Cricket Score

UAE vs PAK 1st T20I Match Prediction, UAE vs PAK Pitch Report, Today's Match UAE vs PAK, UAE vs PAK Prediction, UAE vs PAK Predicted XIs, UAE T20I Tri-Series, Cricket Tips, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, UAE vs Pakistan

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை