WI vs BAN, 3rd ODI: விண்டீஸை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலிரண்டு போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று தொடரை வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கயானாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப், பிராண்டன் கிங், ஷமாரா ப்ரூக்ஸ் ஆகியோர் ஒற்றையிலக்க ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேசி கார்ட்டி - நிக்கோலஸ் பூரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பூரன் அரைசதம் அடித்தார்.
பின் 33 ரன்களில் கார்ட்டி ஆட்டமிழக்க, 73 ரன்களில் நிக்கோலஸ் பூரனும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 48.4 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் தஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய வங்கதேச அணியில் நஜ்முல் ஹுசைன் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் - லிட்டன் தாஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் தமிம் இக்பால் 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனியில் அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். இருந்தாலும் அந்த அணி 48.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் விண்டீஸை வீழ்த்தியது.
இதன்மூலம் வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மண்ணிலே ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.