இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தின் எந்தவித அப்டேட்டும் இதுவரை வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் ’வலிமை’ அப்டேட் கேட்டு அடிக்கடி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். 

Advertisement

மேலும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது பீல்டிங் செய்துகொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மொயீன் அலியிடம் ரசிகர்கள் சிலர் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை கேட்டது சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

Advertisement

இதனால், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித் பிறந்தநாளான கடந்த மே 1 ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்தார். ஆனால், கரோனாவை காரணம் காட்டி மற்றொரு நாளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என பின்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

இந்நிலையில் தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் மீண்டும்‘வலிமை’ படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள்  கேட்கத்தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நேற்றைய தினத்தில் அஜித் ரசிகர்கள் ‘வலிமை அப்டேட்’ என்று எழுதிய பதாகைகளை தூக்கிக்காட்டினர். 

அதோடு பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் அஸ்வினிடமும் ‘வலிமை’ அப்டேட் கேட்டுள்ளனர். இந்த புகைப்படங்களும், காணொளிகளும் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டிங்காகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News