இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான போட்டியில் தமிழ்நாடு மற்றும் சிக்கிம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு இந்திரஜித் மற்றும் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். பின்னர் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் இந்திரஜித் தனது விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பினையும் தவறவிட்டார்.

Advertisement

அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜெகதீசன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 88 ரன்களைச் சேர்த்து கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் இதற்கு மத்தியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய பூபது குமார் 36 ரன்களையும், ரித்திக் ஈஸ்வரன் 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஸ்கோரை கொண்டுவந்தனர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களைக் குவித்தது. சிக்கிம் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரோஷன் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சிக்கிம் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் நிலேஷ் லமிச்சானே ரன்கள் ஏதுமின்றியும், பர்த் பல்வத் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஆஷிஷ் தாபா 20 ரன்களையும், அன்குர் மாலிக் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் சிக்கிம் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழ்நாடு அணி தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தமிழ்நாடு அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் சிக்கிம் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.  

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News