வில் யாங்கை க்ளீன் போல்டாக்கிய தஸ்கின் அஹ்மத் - வைரலாகும் காணொளி!

Updated: Mon, Feb 24 2025 20:21 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற  6ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்து அசத்திய நிலையில் 77 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜகர் அலி 45 ரன்களைச் சேர்த்தார். 

அதேசமயம் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் கடந்த ஆட்டத்தில் சதமடித்து அசத்திய வில் யங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சனும் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் நியூசிலாந்து அணி 15 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்துள்ள டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். 

இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து பேட்டர் வில் யங்கை வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹ்மத் க்ளின் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் முதல் ஓவரை தஸ்கின் அஹ்மத் வீசிய நிலையில், அந்த ஓவரின் கடைசி பந்தை அடிக்க முயன்ற வில் யங் பந்தை தவறவிட, அது நேரடியாக மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் ரனக்ள் ஏதுமின்றி வில் யங் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

நியூசிலாந்து பிளேயிங் லெவன்: வில் யங், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே

Also Read: Funding To Save Test Cricket

வங்கதேசம் பிளேயிங் லெவன்: தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தஃபிசூர் ரஹ்மான்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை