ZIM vs IRE : 18 பேர் அடங்கிய ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!

Updated: Fri, Aug 20 2021 17:48 IST
Taylor, Ervine, Williams return for Ireland, Scotland tour (Image Source: Google)

அயர்லாந்து அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடர் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதவுள்ள கடைசி தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இத்தொடருக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜிம்பாப்வே அணியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதே அணி ஸ்காட்லாந்து அணியுடனான தொடரிலும் பங்கேற்கும் என ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வே அணி: ரியான் பர்ல், ரெஜிஸ் சகப்வா, டெண்டாய் சதாரா, கிரேக் எர்வின், லூக் ஜோங்வே, டினாஷே கமுன்ஹுகம்வே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்ஸா, தரிசாய் முசகந்தா, பிளஸிங் முசரபானி, டியோன் மியர்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, பிராண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ், டொனால்ட் திரிபனோ.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை