Asian Games 2023: ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

Updated: Tue, Sep 19 2023 13:37 IST
Asian Games 2023: ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு! (Image Source: Google)

சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளன. இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 39 விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற உள்ளன. இந்த முறை இந்திய அணி கிரிக்கெட் விளையாட்டுப் பிரிவில் முதன்முறையாக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் இந்திய அணி நேரடியாக காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.இந்தியாவைத் தவிர பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளும் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியாவின் முதல் போட்டி அக்டோபர் 3ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்கு தொடங்குகிறது.

முதல் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதி 1-இல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் காலிறுதி-4-ஐ வெல்லும் அணியுடன் விளையாடும். இந்தப் போட்டியும் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு நடைபெறும்.

அரையிறுதியில் வெற்றி பெற்ற பிறகு, அக்டோபர் 7ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு நடைபெறும் தங்கப் பதக்கத்திற்கான போட்டி நடைபெறும். அதேசமயம் அக்டோபர் 7ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்கு வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அரையிறுதிச்சுற்றில் தோலியடைந்த அணிகள் மோதும் எனப்து குறிப்பிடத்தக்கது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை