SA vs PAK: கேப்டனாக தனித்துவ சாதனை படைத்த டெம்பா பவுமா!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனாது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் இணை அதிரடியாக விளையாடி ஆணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 10 பவுண்டரிகளுடன் 81 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் மறுபக்கம் சதமடித்து விளையாடி வந்த ஷான் மசூத் 145 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 478 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், 58 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 8.1 ஓவர்களில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 10 விக்கெட் வித்தியாசத்த்ல் பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக செயல்பட்ட முதல் 9 போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவுசெய்து இரண்டாவது வீரர் எனும் வார்விக் ஆம்ஸ்ட்ராங், லிண்ட்சே ஹாசெட் ஆகியோரது சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.
இதற்கு முன் கடந்த வார்ன்விக் ஆம்ஸ்ட்ரங் 1920-21ஆம் ஆண்டிலும், லிண்ட்சே ஹாசெட் 1941-51ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்ட முதல் 9 போட்டிகளில் 8 வெற்றிகளை கடந்து சாதனை படைத்துள்ளனர். அவர்கள் வரிசையில் தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவும் கேப்டனாக செயல்பட்ட 9 போட்டிகளில் 8 விக்கெற்றிகளை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
கேப்டனாக அதிக வெற்றிகள் (முதல் 9 டெஸ்ட் போட்டிகளில்)
- 9 - பெர்ஸி சாப்மேன் (இங்கிலாந்து)
- 8 - வார்விக் ஆம்ஸ்ட்ராங் (ஆஸ்திரேலியா)
- 8 - லிண்ட்சே ஹாசெட் (ஆஸ்திரேலியா)
- 8 - டெம்பா பவுமா (தென் ஆப்பிரிக்கா)