தி ஹண்ட்ரெட்: ட்ரெண்ட் ராக்கெட்ஸை பந்தாடியது சதர்ன் பிரேவ்!

Updated: Fri, Aug 26 2022 09:57 IST
The Hundred 2022: Davies, bowlers keep Brave hopes alive (Image Source: Google)

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் - ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பைரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், கொஹ்லர் ஆகியோர் தலா 8 ரன்களுடன் நடையைக் கட்டினர். ஒருமுனையில் டேவிட் மாலன் அதிரடியாக விளையாட, மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணமே இருந்தன. 

தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட டேவிட் மாலன் அரைசதம் கடந்தது, 59 ரன்களையும் சேர்த்தார். இதன்மூலம் 100 பந்துகள் முடிவில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து இலக்கை துரத்திய சதர்ன் பிரேவ் அணியில் பால் ஸ்டிர்லிங், கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக்கும் 24 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் டேவிஸ் - ரோஸ் வைட்லே இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அலெக்ஸ் டேவிஸ் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 51 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் சதர்ன் பிரேவ் அணி 95 பந்துகளில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை