தி ஹண்ட்ரெட்: மாலன் காட்டடி; டிரெண்ட் ராக்கெட்ஸ் அபார வெற்றி!

Updated: Sat, Aug 13 2022 22:26 IST
The Hundred 2022: Dawid Malan leads the tall chase as Rockets gun down Originals' 189 with six balls (Image Source: Google)

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரெட் எனப்படும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் - டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் அணியில் கேப்டன் ஜோஸ் பட்லர் - பிலிப் சால்ட் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பட்லர் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, மறுமுனையில் பிலிப் சால்ட் அரைசதம் கடந்து அசத்தினார். 

அதன்பின் களமிறங்கிய ரஸ்ஸல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லௌரி எவன்ஸ் ஆகியோரும் ஓரளவு ரன்களைச் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த பிலிப் சால்ட் 70 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 100 பந்துகள் முடிவில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய டிரெண்ட் அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் - டேவிட் மாலன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 38 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டாம் கொஹ்லர் 30 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.

ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டி வந்த டேவிட் மாலன் 98 ரன்களைச் சேர்த்ததுடன், அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். இதன்மூலம் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை