தி ஹண்ரட்: ரஷீத், ஹேல்ஸ் அதிரடியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Tue, Jul 27 2021 11:28 IST
THE HUNDRED Men: Hales, Rashid Khan star in Rockets' memorable win (Image Source: Google)

தி ஹண்ரன் ஆட்டவர் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ட்ரெண்ட் ராக்கெஸ் அணி, நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ர சூப்பர் சார்ஜர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. 

அதன்படி விளையாடிய அந்த அணி 99 பந்துகளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சிம்ப்சன் 42 ரன்களையும், ஹேரி ப்ரூக் 38 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய ராக்கெட்ஸ் அணியும் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் அலெக்ஸ் ஹேல்ஸ் - ரஷீத் கான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் ராக்கெட்ஸ் அணி இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது. 

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ரஷீத் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை