தி ஹண்ரட்: பேர்ஸ்டோவ், நீஷம் ஆட்டத்தில் மண்ணை கவ்விய சதர்ன் பிரேவ்!

Updated: Wed, Jul 28 2021 10:06 IST
Image Source: Google

தி ஹண்ரட் ஆடவர் தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் ஜானி பேர்ஸ்டோவ் தலைமையிலான வெல்ஷ் ஃபையர் அணியும், ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான சர்தர்ன் பிரேவ் அணியும் விளையாடின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய வெல்ஷ் ஃபையர் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - டாம் பாண்டன் இணை அதிரடியான தொடக்கத்தைத் தந்து, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. 

இதில் பாண்டன் 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வந்த பேர்ஸ்டோவ் அரைசதம் கடந்தார். இதையடுத்து களமிறங்கிய டக்கெட்டும் அரைசதம் கடந்து அசத்தினார். 

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் வெல்ஷ் ஃபையர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 72 ரன்களையும், டக்கெட் 53 ரன்களையும் சேர்த்தனர்.

அதன்பின் இமாலய இலக்கை துரத்திய சதர்ன் பிரேவ் அணிக்கு டி காக் - ஜேம்ஸ் வின்ஸ் இணை நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அதன்பின் களமிறங்கிய வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்ததால், இன்னிங்ஸ் முடிவில் அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. வெல்ஷ் ஃபையர் அணி ஜிம்மி நீஷம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதன் மூலம் வெல்ஷ் ஃபையர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சதர்ன் பிரேவ் அணியை வீழ்த்தி, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 2ஆம் இடத்திற்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை