மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவது வலி மிகுந்தது - மிட்செல் ஸ்டார்க்!

Updated: Tue, Jun 06 2023 11:32 IST
Image Source: Google

உலகின் பெரிய நட்சத்திரங்கள் எல்லோரும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். மேலும் பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார்கள். இப்படியான நிலையில் ஆஸ்திரேலியா அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் மட்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.

அவர் நாட்டுக்காக அதிக காலம் விளையாட வேண்டும் என்பதற்காக ஐபிஎல் மாதிரியான தொடர்களைத் தவிர்ப்பதாக அறிவித்திருந்தார். இதுவரையில் அவர் மொத்தம் இரண்டு ஐபிஎல் சீசர்கள் மட்டுமே அதுவும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி இருக்கிறார். அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு விளையாடினார்.

நாளை துவங்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்றால் அனைத்து விதமான உலகக் கோப்பைகளையும் வென்ற அரிய வீரர் என்ற சாதனைக்கு இவர் சொந்தக்காரர் ஆவார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியாவுக்கும் விளையாடி வரும் இவர் இதுவரையில் மொத்தம் 77 டெஸ்ட் போட்டிகளில் 27.52 சராசரியில் 306 விக்கட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஐபிஎல் தொடரில் ஏன் விளையாடுவதில்லை என்று பேசிய மிட்சல் ஸ்டார்க், “ஆஸ்திரேலியா அணிக்காக தொடர்ச்சியாக விளையாடுவதற்காக, புத்திசாலித்தனமாக சில விஷயங்களை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஐபிஎல் தொடரில் நிறைய பணம் கிடைக்கிறதுதான், ஆனால் நான் ஆஸ்திரேலியா அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் விளையாட விரும்புகிறேன். இது என்னால் முடியும் முடியாது என்பதை தாண்டி செய்வதற்கு எனக்குள் ஏதாவது மீதம் இருக்கும் என்று நம்புகிறேன்.

10 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவது வலி மிகுந்தது. ஆனால் நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு அதற்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். எனது பந்துவீச்சில் நான் காற்றில் வேகத்தை இழந்தவுடன், என் இடத்திற்கு என்னை துரத்த ஒருவர் வருவார். அடுத்த இடது கை வேகப் பந்துவீச்சாளர் வந்ததும் எனது இடம் காலியாகும் என்று தெரியும். ஊடகங்கள் விமர்சனம் என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என்னைத் தொந்தரவு செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது அவர்கள் என்னைத் தொந்தரவு செய்ய முடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை