நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான்!

Updated: Sat, Jan 25 2025 12:50 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. 

மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தானைத் தவிர்த்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட முடிவுசெய்துள்ளது. இந்த தொடருக்கான தயாரிப்பைப் பொறுத்தவரை, இந்த முத்தரப்புத் தொடர் மூன்று அணிகளுக்கும் முக்கியமானது. அந்தவகையில் இந்த முத்தரப்பு தொடருக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 

இந்தத் தொடரில் இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 4 போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி முதல் போட்டி பிப்ரவரி 8 ஆம் தேதி பாகிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து பிப்ரவரி 10ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஒரு போட்டி நடைபெறும். இந்த இரண்டு போட்டிகளும் லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் மூன்றாவது போட்டி பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டிபிப்ரவரி 12ஆம் தேதியும், முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டி பிப்ரவரி 14 ஆம் தேதியும் நடைபெறும். இந்த இரண்டு போட்டிகளும் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரண்டாவது போட்டியைத் தவிர, மற்ற அனைத்து போட்டிகளும் பகல்-இரவு போட்டிகளாக நடைபெறும் என்றும் பிசிபி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), வில் யங், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன், பென் சியர்ஸ், வில் ஓ'ரூர்க்

Also Read: Funding To Save Test Cricket

தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராஸ்ஸி வான்டெர் டுசென்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை