பயோ பபுளுக்குள் கரோனா; விளக்கமளித்த கங்குலி!
ஐபிஎல் அணிகளின் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளானதையடுத்து நடப்பு ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வீரர்கள் பயோ பபுளில் வைத்து கண்காணிக்கப்பட்டனர்.
இப்படி வீரர்கள் ஜிபிஆர்எஸ், டிஜிட்டல் முறைகளில் கண்காணிக்கப்பட்டும் வீரர்கள் தொற்றுக்கு ஆளானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி “எங்களுக்கு கிடைத்த அறிக்கையின் படி எந்த இடத்திலும் பாதுகாப்பு நடைமுறைகளில் மீறல் ஏற்படவில்லை. அதையும் பயோ பபுளுக்குள் எங்கு பாதிப்பு ஏற்பட்டது? எப்படி வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டது? என்பது சொல்வது கடினம்.
நாட்டில் இத்தனை பேர் எப்படி தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்று சொல்வது கடினம். நடப்பு ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, ரத்து செய்யப்படவில்லை.
அதனால் டி20 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்பு மற்றும் இடம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.