ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2019-2021இல் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்தது. அந்த 2 ஆண்டு காலக்கட்டத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிகமான வெற்றிகளை பெற்று, அதிக  வெற்றி சதவிகிதங்களுடன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும்.

Advertisement

அந்தவகையில் முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி நியூசிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. 

Advertisement

2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்துவருகிறது. இந்த நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி 75 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், 70 சதவிகிதத்துடன் ஆஸ்திரேலிய அணி 2ஆம் இடத்திலும் உள்ளன. 3, 4, 5ஆம் இடங்களில் முறையே இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உள்ளன.

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் உள்ள நிலையில், அந்த 2 அணிகள் தான் ஃபைனலில் மோதும் என ஷேன் வாட்சன் ஆருடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள ஷேன் வாட்சன், “தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளை இனிமேல் பின்னுக்குத்தள்ளுவது கடினம். 2 அணிகளுமே சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகின்றன. ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா நன்றாக ஆடியிருக்கிறது. இந்தியா - பாகிஸ்தானையும் குறைத்து மதிப்பிடமுடியாது. அவர்களும் ஃபைனலுக்கான கதவை தட்ட முயற்சிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News