இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17ஆவது லீக் போட்டியானது நேற்று புனே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணியானது 256 ரன்கள் குவிக்க பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 261 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி 97 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 103 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி அழைத்து சென்றார். அவரது இந்த ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Advertisement

மேலும் இந்த போட்டியில் அவர் அடித்த சதம் மூலம் உலக கோப்பை வரலாற்றில் சேசிங்கின் போது அவர் அடித்த முதல் சதமாகவும், ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்த 48ஆவது சதமாகவும் அமைந்தது. இப்படி பல சாதனைகளை விராட் கோலி இந்த சதத்தின் மூலம் படைத்திருந்தாலும் அவர் அடித்த இந்த சதத்திற்கு பின்னால் ஏகப்பட்ட விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஏனெனில் நேற்றைய போட்டியின் போது 42ஆவது ஓவரை வீச வந்த சுழற்பந்து வீச்சாளர் நசும் முதல் பந்தினை வைடாக வீசினார். ஆனால் நடுவர் அதற்கு வைடு கொடுக்கவில்லை. ஏனெனில் அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்களும், விராட் கோலியின் சதத்திற்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் அந்த வைடு வழங்கப்பட்டிருந்தால் விராட் கோலியால் சதத்தை பூர்த்தி செய்ய முடியாமல் கூட போயிருக்கலாம்.

அவ்வேளையில் நடுவர் அந்த பந்தினை வைட் கொடுக்காதது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் காலின் அருகில் கூட செல்லாமல் பந்து சற்று நகர்ந்தே சென்றது. இப்படி விலகி சென்ற பந்து குறித்தும், நடுவரின் இந்த தவறான முடிவு குறித்துமே அனைவரது மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விராட் கோலி சந்தித்த அந்த பந்திற்கு நடுவர் வைட் வழங்காததற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர், “உண்மையிலேயே அந்த பந்து வைட் பால் தான். பார்த்த உங்களுக்கே நன்றாக தெரியும் அந்த பந்து எவ்வளவு விலகி சென்றது என்று இருந்தாலும் அதை விட்டு விடுங்கள். விராட் கோலி மிக அற்புதமாக பேட்டிங் செய்தார். ரசிகர்களாகிய நமக்கு அவரது சதத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்திருக்கும். 

Advertisement

அதேபோன்றுதான் நடுவரும் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதன் காரணமாகவே அவர் வொயிடு கொடுக்காமல் இருந்திருக்கலாம். அவர் விளையாடும் விதத்தை பார்க்கும்போது அழகாக இருக்கிறது. மேலும் ஒரு சதத்தை அவர் இந்திய அணிக்காக அடித்து நம்மை மகிழ்வித்து இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News