‘இது ஒன்றும் ஐபிஎல் கிடையாது’ - இந்திய வீரர்களுக்கு முகமது கைஃப் எச்சரிக்கை!

Updated: Sun, Jun 02 2024 09:00 IST
‘இது ஒன்றும் ஐபிஎல் கிடையாது’ - இந்திய வீரர்களுக்கு முகமது கைஃப் எச்சரிக்கை! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயராகும் வகையில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நேற்றைய தினம் விளையாடியது. அதன்படி நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைக் குவித்தது. 

இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 53 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியானது தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மஹ்முதுல்லா - ஷாகில் அல் ஹசன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 40 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஹர்ஷ்தீப் சிங், ஷிவம் தூபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். அதிலும் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய இவர்கள் தற்போது சொதப்பியது பெரும் விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களுக்கு முன்னாள் வீரர் முகமது கைஃப் எச்சரிக்கை கொடுத்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், டி20 உலகக்கோப்பை தொடரில் நியூயார்க்கில் நடைபெறும் போட்டிகளிலும் பிட்ச் இதுபோன்றே செயல்பட்டால் நிச்சயம் பேட்டிங் செய்ய கடினமானதாக இருக்கும். ஏனெனில் பஞ்சுபோன்ற பவுன்ஸ், மெதுவான மற்றும் பெரிய அவுட்பீல்டுடன் கூடிய இதுபோன்ற மைதானங்களில் நுட்பத்துடன் விளையாட கூடிய பேட்டர்களால் மட்டுமே ரன்களைச் சேர்க்க முடியும். இது ஐபிஎல் தொடர் அல்ல என்பதனை வீரர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை