நாங்கள் தோல்வி அடைந்ததற்கான காரணம் இதுதான் - ஷுப்மன் கில்!

Updated: Fri, Apr 05 2024 12:09 IST
நாங்கள் தோல்வி அடைந்ததற்கான காரணம் இதுதான் - ஷுப்மன் கில்! (Image Source: Google)

அஹ்மதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களை சேர்த்து அசத்தியது. 

இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 89 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 6 பவுண்டரிகளை விளாசி 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த ராகுல் திவேத்தியா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான் ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், சிக்கந்தர் ரஸா, சாம் கரண், ஜிதேஷ் சர்மா போன்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த ஷஷாங்க் சிங் - அஷுதோஷ் சர்மா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஷஷாங்க் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில், “இப்போட்டியில் நாங்கள் இரண்டு கேட்சகளை தவறவிட்டது எங்களது தோல்விக்கு வழி வகுத்தது என நினைக்கிறேன். நீங்கள் கேட்சுகளை தவற விடும்போது வெற்றி பெறுவது எளிதானதல்ல. பந்து வீச்சாளர்கள் அவர்களது வேலைகளை சிறப்பாக செய்தனர். பந்து பேட்டிற்கு நன்றாக வரும்போது, எதிரணியை கட்டுப்படுத்துவது கடினம். 200 ரன்கள் என்பது வெற்றிபெறுவதற்கு குறைவானது என்று நான் சொல்ல மாட்டேன்.

புது பந்தை வீசும் போது அது பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருந்தது. இப்போட்டியில் 15 ஓவர் வரை நாங்கள் சரியான வழியில்தான் இருந்தோம். கேட்ச்களை தவறவிட்டது எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வகையில் தர்ஷன் நல்கண்டே எங்களுக்கு கடைசி ஓவரை வீசுவதற்கு சிறந்த வீரராக இருந்தார். நீங்கள் பார்த்திராத வீரர்கள் இதுபோல் திடீரென வந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.  இதுதான் ஐபிஎல் தொடரின் அழகும் கூட” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை