சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரராக இதுவே எனது கடைசி நாள் - ரவி அஸ்வின் உருக்கம்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்ரு அறிவித்தார். தற்போது 38 வயதான சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணிக்காக 2010ஆம் ஆண்டு அறிமுகமான அஸ்வின் இதுநாள் வரை 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த அஸ்வின் 151 இன்னிங்ஸில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் என 3503 ரன்களையும், 37 ஐந்து விக்கெட் ஹாலுடன் 537 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இதுதவிர்த்து 116 ஒருநாள் போட்டிகளில் 707 ரன்களையும், 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியிலும் அஸ்வின் இடம்பிடித்ததுடன், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கும் மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார். இதனையடுத்து அஸ்வினுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய அஸ்வின், "சர்வதேச அளவில் அனைத்து வடிவங்களிலும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக இது எனது கடைசி நாள். ஒரு கிரிக்கெட் வீரராக என்னிடம் இன்னும் சில திறன்கள் உள்ளன என்று நினைக்கிறேன், ஆனால் நான் அதை கிளப் அளவிலான கிரிக்கெட்டில் முன்னிலைப்படுத்தி காட்ட விரும்புகிறேன். ஆனால் இந்தியாவுக்கு இதுவே கடைசி நாளாகும். எனது இந்த பயணத்தில் நான் மிகவும் வேடிக்கையாக இருந்தேன்.
ரோஹித் மற்றும் எனது சக வீரர்கள் பலருடன் பல வருடங்களாக நான் சிலரை இழந்திருந்தாலும், அவர்களுடன் நிறைய நினைவுகளை உருவாக்கினேன் என்று சொல்ல வேண்டும். ஆடை மாற்றும் அறையிலிருந்து வெளியேறிய கடைசி OG நாங்கள் தான். இந்த மட்டத்தில் விளையாடும் எனது கடைசி முறையாக இதைக் குறிப்பிடுகிறேன். வெளிப்படையாக, நன்றி சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஆனால் நான் பிசிசிஐ மற்றும் சக வீரர்களுக்கு நன்றி சொல்லாவிட்டால் எனது கடமைகளில் நான் தவறிவிடுவேன். அவற்றில் சிலவற்றை நான் பெயரிட விரும்புகிறேன். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து பயிற்சியாளர்களும், மிக முக்கியமாக ரோஹித் சர்மா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, சட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் பல ஆண்டுகளாக சிறந்த கேட்சுகளை எடுத்து எனக்கு விக்கெட்டுகளை எடுக்க உதவியவர்கள்.
Also Read: Funding To Save Test Cricket
மேலும், மிகவும் கடினமான போட்டியாளராக இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் ஒரு பெரிய நன்றி. அவர்களுக்கு எதிராக விளையாடியதை நான் மகிழ்ந்தேன். இந்த முடிவு ஏற்கனவே நீண்டதாகிவிட்டதாக நினைக்கிறேன். இது உண்மையிலேயே மிகவும் உணர்ச்சிகரமான தருணம். நான் கேள்விகளுக்கு சரியான முறையில் பதிலளிக்கும் நிலையில் இல்லை என்று நினைக்கிறேன், அதனால் என்னை மன்னிக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.