SA vs AUS, 1st T20I: அஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக, உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அதற்கான முன் தயாரிப்புகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் மூன்றாம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடுகிறது.
இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக செப்டம்பர் 7ஆம் தேதி ஆரம்பித்தது செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு ஆஸ்திரேலியா அணிகளுக்கும் மிசட்சல் மார்ஷ் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். உலகக் கோப்பைக்கு முன்பாக பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த சுற்றுப்பயணம் ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் முக்கியமானது.
இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் விலகிய நிலையில், கிளென் மேக்ஸ்வெல்லும் தொடரிலிருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் அணிக்கு திரும்பியிருப்பது அணிக்கு சற்று நம்பிக்கையளிக்ககூடிய விசயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில் மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஹார்டி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் : மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கே), ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.