Advertisement
Advertisement

Aaron hardie

NZ vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்கு வாய்ப்பு!
Image Source: Google

NZ vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்கு வாய்ப்பு!

By Bharathi Kannan February 18, 2024 • 17:12 PM View: 127

ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.  

அதன்படி மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களுடன் மார்கஸ் ஸ்டொய்னிஸ், மேத்யூ வேட், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், டேவிட் வார்னர் போன்ற நட்சத்திர வீரர்களும் அணியில் இடம்பிடித்திருந்தனர்.

Related Cricket News on Aaron hardie