Tilak Varma Joins Hampshire: இந்திய அணியின் இளம் அதிரடி பேட்டரான திலக் வர்மா, தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் சீனில் ஹாம்ப்ஷையர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் திலக் வர்மா. கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரையிலும் 4 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதம் உள்பட 68 ரன்களையும், 25 டி20 சர்வதேச டி20 போட்டிகளில் 2 சதம், 3 அரைசதங்களுடன் 749 ரன்களையும் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் 54 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8 அரைசதங்களுடன் 1499 ரன்களைக் குவித்துள்ளார். 

Advertisement

இந்நிலையில் தான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாம்ப்ஷையர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “ஹைதராபாத்தை சேர்ந்த சர்வதேச திலக் வர்மாவை, இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் லீக்கில் விளையாட ஹாம்ப்ஷயர் அணி அணுகியுள்ளது. 

ஹாம்ப்ஷயர் கவுண்டியில் அவருக்கு சிறப்பான பணி கிடைக்க ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹாம்ப்ஷயர் அணியானது, தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை விளையாடியுள்ள ஏழு போட்டிகளில் இரண்டு வெற்றிகள், மூன்று டிராக்கள் மற்றும் இரண்டு தோல்விகளைப் பதிவு செய்துள்ளது. இதுபோன்ற சூழலில் திலக் வர்மா அந்த அணியில் இணைந்தால் அது பெரும் பலமாக இருக்கும்.

ஏனெனில் திலக் வர்ம இதுவரை 18 முதல் தர போட்டிகளில் விளையாடி அதில் ஐந்து சதங்கள் மற்றும் நான்கு அரைசதங்கள் உட்பட 1204 ரன்களை குவித்துள்ளார். மேலும் அவரால் பந்துவீச்சிலும் அணிக்கு பலனளிக்க முடியும். இதுதவிர்த்து நடப்பு ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவும் உறுதுணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

முன்னதாக இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வார், கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக அவர் யார்க்ஷயர் அணியுடன் இணைய உள்ளார். இதன் மூலம் அவர் ஒருநாள் மற்றும் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் யார்க்ஷயர் அணிக்காக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News