Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி உலகக்கோப்பை தொடருக்காக தங்களைத் தயார்ப்படுத்தி வருகிறது.

அந்தவகையில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகாள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தங்கள் ஓய்வு முடிவை திரும்பப்பெற்ற முகமது அமீர் மற்றும் இமாத் வாசிம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இத்தொடருக்கான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த கேன் வில்லியம்சன், டெவான் கான்வே, டிரெண்ட் போல்ட், லோக்கி ஃபார்குசன், கிளென் பிலீப்ஸ் மிட்செல் சாண்ட்னர், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திர போன்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்றுள்ளதால் அவர்களுக்கு இத்தொடரிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக முன்னணி வீரர்கள் சொந்த நாட்டின் தொடரை தவறவிடுகின்றனர் என் குற்றச்சாட்டு நியூசிலாந்து அணி வீரர்கள் மீது எழுந்துள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவதன் மூலம் அவர்களுக்கு நன்மைதான் கிடைக்கும் என்று நியூசிலாந்து அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “உலகெங்கிலும் உள்ள வீரர்கள் ஐபிஎல் விளையாடச் செல்லும்போது, ​​அவர்கள் துணைக் கண்ட சூழ்நிலைகளிலும் குறிப்பாக இந்திய சூழ்நிலைகளிலும் விளையாடிய அனுபவத்தைப் பெறுவார்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் மிகப்பெரிய நல்ல விஷயம். ஏனெனில் அதன் மூலம் நீங்கள் இந்தியாவின் அனைத்து மைதானங்களில் விளையாடுவது அவர்களுக்கு இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் கூட பலனளிக்கும் என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News