டிஎன்பிஎல் 2021 : நெல்லையை வீழ்த்தியது கோவை!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி கேப்டன் ஷாருக் கானின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாருக் கான் 64 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் கடின இலக்கை துரத்திய நெல்லை அணிக்கு அபாரஜித் - சூர்யபிரகாஷ் இணை சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. பின் 28 ரன்களில் அபாரஜித் ஆட்டமிழக்க, 36 ரன்களில் சூர்யபிரகாசும் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்தரஜித் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருப்பினும் ஆட்டநேர முடிவில் நெல்லை அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.