டிஎன்பிஎல் 2021: திருப்பூர் தமிழன்ஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!

Updated: Thu, Jul 29 2021 12:37 IST
Image Source: Google

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்தொடரின் லீக் போட்டிகளிலேயே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதால், அடுத்தடுத்த போட்டிகள் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்தில் இருக்கும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், 6ஆவது இடத்திலிருக்கும் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

நடப்பு சீசனில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பங்கேற்ற 4 லீக் ஆட்டங்களில் 2 வெற்றி, 2 தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. 

அதேசமயம் திருப்பூர் தமிழன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, முயிவில்லை என மொத்த 3 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் 6ஆவது இடத்தில் நீடிக்கிறது. 

இரு அணியும் கடைசியாக விளையாடி போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் களமிறங்க உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அணி விவரம் 

ரூபி திருச்சி வாரியர்ஸ்: ராகுல், ஆகாஷ் சும்ரா, எம்.இ யாழ் அருண் மோழி, எஸ் அனிருதா, எம் பொய்யாமொழி, ரஹில் எஸ் ஷா, எஸ் சந்தோஷ் சிவ், ஆண்டனி தாஸ்,ஆதித்யா கணேஷ், நிதிஷ் எஸ் ராஜகோபால், ஆர் கணேஷ், சுமந்த் ஜெயின், முகமது அட்னான் கான், பி சரவணா குமார், அமித் சாத்விக், ஜி ஹேமந்த் குமார், கே முகுந்த், கார்த்திக் சண்முகம், மதிவனன், கார்த்திக் ஆர், முரளி விஜய்.

ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்: எஸ் தினேஷ், எஸ் மணிகண்டன், ஆர்.ஐ.ராஜ்குமார், எஸ் மோகன் பிரசாத், எஸ் சித்தார்த், எஸ் அரவிந்த், மான் கே பாஃப்னா, பி பிரான்சிஸ் ரோகின்ஸ், கே கவுதம் தாமரை கண்ணன், அஸ்வின் கிறிஸ்ட் ஏ, துஷார் ரஹேஜா,ஏ கருப்புசாமி, சி.ஸ்ரீராம், எம் முகமது, முகமது ஆஷிக் என், அஃபான் காதர் எம், ஆதித்யா கிரிதர், சாதியன்னார்யன் எல், எம் ரூபன் ராஜ், மோகன் பிரசாத் எஸ், மான் கே பாஃப்னா, ஆர் ராஜ்குமார், நடராஜன் எஸ்.டி, அஸ்வின் பாலாஜி எஸ், தினேஷ் கார்த்திக்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை