ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு விருந்து படைத்துவரும்  டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசனில் இன்று 15ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது.  

Advertisement

இப்போட்டியில் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்திலிருக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஐந்தாம் இடத்திலிருக்கும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதவுள்ளன. 

Advertisement

நடப்பு சீசன் டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வி, இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதிலும் கடைசியாக அந்த அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று அசத்தியது.

அதேசமயம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில்ல் ஓரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. 

மேலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான போட்டிலும் பேட்டிங்கில் ஏற்பட்ட சொதப்பலினால் தோல்வியைத் தழுவியுள்ள சேலம் அணி, நிச்சயம் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் முனைப்போடு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விவரம்:

Advertisement

சேலம் ஸ்பார்டன்ஸ்: பி பிரணேஷ், எஸ் அபிஷீக், அக்‌ஷய் வி சீனிவாசன், முருகன் அஸ்வின், எஸ் பூபாலன், டேரில் எஸ் ஃபெராரியோ, எம் கணேஷ் மூர்த்தி, கோபிநாத் கேஎச், டிடி லோகேஷ் ராஜ், ஜி பெரியசாமி, எஸ் சுபம் மேத்தா, யு சுஷில், எம் விஜய் குமார், விஜய் சங்கர், கிஷூர் ஜி, ஆரிஃப் ஏ, சுகனேஷ் எம், அபிநவ் விஷ்ணு, ரத்னம் ஏவிஆர், ஆர் கார்த்திகேயன், வாஷிங்டன் சுந்தர்.

திண்டுக்கல் டிராகன்ஸ்: கே விஷால் வைத்தியா, எஸ் அருண், அத்வைத் சர்மா, ஆர் சுதேஷ், எஸ் சுவாமிநாதன், எல் விக்னேஷ், ஆர் சீனிவாசன், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், எஸ்.லோகேஷ்வர், சி ஹரி நிஷாந்த், சி அஸ்வின், எம்.எஸ்.சஞ்சய், வி லக்ஷ்மன், கே மணி பாரதி, ஏ.ஆர்.சிவா முருகன், குர்ஜப்னீத் சிங், ஆர் விமல் குமார், கிஷன் குமார் எஸ், விக்னேஷ்வரன் எஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆர் விவேக், எம் சிலம்பரசன்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News