டிஎன்பிஎல் 2021: நெல்லை ராயல் கிங்ஸ் vs திருப்பூர் தமிழன்ஸ்!

Updated: Mon, Jul 26 2021 12:26 IST
TNPL 2021: Thiruppur Thamizhans Facess off Nellai Royal kings Today (Image Source: Google)

டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்து படைத்து வருகிறது. அதிலும் நேற்று நடைபெற்ற ஹைஸ்கோரின் போட்டி ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்து சென்றதாக அமைந்தது. 

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு சீசனில் திருப்பூ அணி ஒரு வெற்றியைக் கூட பெறாத சூழலில், இன்றைய தினம் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்க தயாராகி வருகின்றது.  அதிலும் அந்த அணி விளையாடிய 2 போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியுள்ளது. 

நெல்லை அணி ஒரு போட்டியில் தோல்வியையும், ஒரு போட்டியில் வெற்றியையும் பெற்று இரண்டு புள்ளியைப் பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அணி விவரம் 

ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்: எஸ் தினேஷ், எஸ் மணிகண்டன், ஆர்.ஐ.ராஜ்குமார், எஸ் மோகன் பிரசாத், எஸ் சித்தார்த், எஸ் அரவிந்த், மான் கே பாஃப்னா, பி பிரான்சிஸ் ரோகின்ஸ், கே கவுதம் தாமரை கண்ணன், அஸ்வின் கிறிஸ்ட் ஏ, துஷார் ரஹேஜா,ஏ கருப்புசாமி, சி.ஸ்ரீராம், எம் முகமது, முகமது ஆஷிக் என், அஃபான் காதர் எம், ஆதித்யா கிரிதர், சாதியன்னார்யன் எல், எம் ரூபன் ராஜ், மோகன் பிரசாத் எஸ், மான் கே பாஃப்னா, ஆர் ராஜ்குமார், நடராஜன் எஸ்.டி, அஸ்வின் பாலாஜி எஸ், தினேஷ் கார்த்திக்.

நெல்லை ராயல் கிங்ஸ்: எச். திரிலோக் நாக், சி.எச்.ஜிதேந்திர குமார், சஞ்சய் யாதவ் ஆர், வி அதிசயராஜ் டேவிட்சன், டி அஜித் குமார், எம் அபிநவ், என்.எஸ்.ஹரீஷ்,பிரதோஷ் ரஞ்சன் பால், எஸ்.சருண் குமார், பாபா இந்திரஜித், பாபா அபராஜித், அஸ்வத் முகுந்தன், எல் சூர்யப் பிரகாஷ், எஸ்.செந்தில் நாதன், ஜிதேந்திர குமார் சி.எச்., ரோஹித் ராம் ஆர், சத்ராஜ் ஏ, வீரமணி டி, ஸ்ரீ நெரஞ்சன் ஆர், விவேக் ஆர், சுரேஷ் சி, அர்ஜுன் பி மூர்த்தி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை