டிஎன்பிஎல் 2023: சேப்பாகிற்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்!
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் - ஷிவம் சிங் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் ராகுல் 20 ரன்களிலும் ஷிவம் சிங் 21 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய பாபா இந்திரஜித், பூபதி குமார், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஆதித்யா கனேஷ் - சரத் குமா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
பின் 25 ரன்களில் சரத்குமார் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய ஆதித்யா கனேஷ் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் வந்த சுபோத் பாடி அதிரடியாக விளையாடி 31 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் ஓவர்கள் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களைச் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் ராஹில் ஷா 3 விக்கெட்டுகளையும், ராமலிங்கம் ரோஹித் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.