டிஎன்பிஎல் 2023 எலிமினேட்டர்: ராஜகோபால், அஜித்தேஷ் அதிரடி; மதுரை அணிக்கு இமாலய இலக்கு!

Updated: Sat, Jul 08 2023 21:17 IST
Image Source: Google

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய நெல்லை அணிக்கு அருண் கார்த்திக் - சூர்யபிரகாஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சூர்யபிரகாஷ் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான அருண் கார்த்திக்கும் 18 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த அஜித்தேஷ் குருஸ்வாமி - நிதிஷ் ராஜகோபால் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் அரைசதம் கடந்த கையோடு குருஸ்வாமி 50 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய சோனு யாதவும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிதிஷ் ராஜகோபால் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவருக்கு துணையாக விளையாடிய ரித்திக் ஈஸ்வரன் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை