டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை பந்தாடியது நெல்லை ராயல் கிங்ஸ்!

Updated: Wed, Jun 14 2023 19:39 IST
Image Source: Google

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கோவையில் இன்று மாலை நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின . இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய மதுரை அணியில் கேப்டன் ஹரி நிஷந்த் ஒரு முனையில் சிற்பபான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய  வீரர்கள் ஆரம்பம் முதலே சீரான வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய ஹரி நிஷாந்த் அரைசதம் கடந்த நிலையில் 64 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 51 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். நெல்லை அணி சார்பில் மோஹன் பிரசாத் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து தொடர்ந்து 127 ரன்கள் என்ற எளிய இலக்குடன் விளையாடிய நெல்லை அணிக்கு ஸ்ரீ நெரஞ்சன்- அருண் கார்த்திக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கோடுத்தனர். இதில் நெரஞ்சன் 15 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ராஜகோபாலும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

பின் 32 ரன்களில் அருண் கார்த்திக் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அருண் குமார், சோனு யாதவ் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராஜகோபால் 42 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் 13.4 ஓவர்களிலேயே நெல்லை அணி இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை