டிஎன்பிஎல் 2023: சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!

Updated: Mon, Jun 26 2023 22:41 IST
Image Source: Google

டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 18ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்த்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

இதையடுத்து மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஆதித்யா - ஹரி நிஷந்த் இணை களமிறங்கியனர். இதில் ஆதித்யா 6 ரன்களிலும், ஹரி நிஷாந்த் 2 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜெகதீசன் கௌசிக் 4 ரன்களுக்கும், சுரேஷ் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இதையடுத்து வந்த ஸ்ரீ அபிஷேக் 21 ரன்களையும், ஸ்வப்நில் சிங் 11 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் - சரவணன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்து அணிக்கு உதவினார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 56 ரன்களையும், சரவணன் 22 ரன்களையும் சேர்த்தனர். சூப்பர் கில்லீஸ் தரப்பில் பாபா அபாரஜித், சிலம்பரன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.   

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் அணிக்கு ஜெகதீசன் - சந்தோஷ் ஷிவ் இணை தொடக்கம் கொடுத்தனர். இவரும் இணைந்து 59 ரன்கள் சேர்த்த நிலையில் சந்தோஷ் ஷிவ் 28 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெகதீசன் 35 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் பாபா அபாரஜித் ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் களமிறங்கிய சஞ்சய் யாதவ், பிரதோஷ் பால், சசிதேவ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதேசமயம் மறுமுனையில் கடைசிவரை போராடிய பாபா அபாரஜித்தும் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது. 

மதுரை பாந்தர்ஸ் அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், முருகன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை