WTC 2023 Final: சதமடித்து சாதனைப் படைத்த டிராவிஸ் ஹெட்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 2 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், மார்னஸ் லாபஸ்சேன் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதனையடுத்து இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 76 ரன்களுக்கு 3ஆவிக்கெட்டுகளை இழந்த நிலையில், களத்துக்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஒரு பக்கம், ஸ்மித் பொறுமையாக ரன்களை சேர்க்க, மறுபக்கம் டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேவிய அணியின் ஸ்கோரை வேகமாக நகர்த்தி வந்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் ரன்களைச் சேர்த்த டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரிகளை விரட்டி 60 பந்துகளில் அரைசதம் கடந்தார். எனினும் தொடர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு தண்ணீர் காட்டிய டிராவிஸ் ஹெட், குறிப்பாக உமேஷ், ஷர்துல் பந்துவீச்வை வெளுக்க, ரன்கள் வேகமாக வந்தது.
பட்டது. எனினும் அவருடைய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் இந்திய வீரர்களால் அசைத்து கூட பார்க்க முடியவில்லை.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 106 பந்துகளில் சதம் விளாசினார்., இதில் 14 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். இது இந்தியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட் அடித்த முதல் சதம் ஆகும். நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஹெட்க்கு இது 4ஆவது சதம். அதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.