தன் பந்துவீசியதில் இவர்கள் மூவரும் தான் கடினமானவர்கள் - ட்ரெண்ட் போல்ட்!

Updated: Sun, Sep 12 2021 18:55 IST
Trent Boult 'Excited' To Get Back Ahead Of 2nd Phase Of IPL 2021 (Image Source: Google)

சமகாலத்தின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட். 2011ஆம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து அணியில் ஆடிவரும் டிரெண்ட் போல்ட், 73 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 292 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதேபோல், 93 ஒருநாள் போட்டிகளில் 169 விக்கெட்டுகளையும், 34 டி20 போட்டிகளில் ஆடி 46 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் 737 புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிவரும் ட்ரெண்ட் போல்ட், மும்பை அணி 5வது முறையாக கோப்பையை வென்றபோது அந்த அணியில் முக்கிய பங்காற்றினார்.

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆட தயாராகிவரும் ட்ரெண்ட் போல்ட், தனது கெரியரில் இதுவரை தான் பந்துவீசியதில் கடினமான பேட்ஸ்மேன்கள் கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய மூவரும் தான் என்று கூறியுள்ளார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

கிறிஸ் கெய்லுக்கு பந்துவீச எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அதேவேளையில் அவருக்கு பந்துவீசுவது மிகக்கடினம். ரோஹித் சர்மா அபாயகரமான பேட்ஸ்மேன். கேஎல் ராகுலும் அருமையான வீரர் என்று ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை