ஐபிஎல் 2023: முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய டிரெண்ட் போல்ட்!

Updated: Sun, Apr 02 2023 18:46 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் ஆடியது. தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஷ்வால் இருவரும் சிறப்பாக விளையாடினர். இருவரும் 50 ரன்களுக்கு மேல் எடுத்தனர் பட்லர் 54 ரன்களிலும், ஜெய்ஷ்வால் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த சாம்சன் 32 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில், 3 பவுண்டரிகள், 4 சிக்ஸ்ர்கள் அடங்கும். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிரண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதியும் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

 

இதனால் ஹைதராபாத் அணி முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து டிரெண்ட் போல்ட விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை